Sunday, August 24, 2014

உங்கள் முஸ் கிச்சனின் சமையல் அறை டிப்ஸ் ...




* கரப்பான் பூச்சிகள் இருக்குமிடத்தில் வெள்ளைப்பூண்டை நசுக்கி சிறு, சிறு துண்டுகளாக்கி சிதறி இருக்கும்படி போட்டு வைத்தால் கரப்பான் பூச்சிகள் ஒழிந்து விடும்...

* சமையலறை, டைனிங் டேபிள் ஆகிய இடங்களில் ஈ மொய்த்தால் ஒரு குவளை நீரில் 2 டீஸ்பூன் உப்பு கலந்து அந்த இடங்களில் தெளித்து விட்டால் ஈ மொய்க்காது...

* தோசை மாவுடன், சிறிதளவு சோளமாவு சேர்த்து தோசை வார்த்தால், தோசையின் சுவை அபாரமாக இருக்கும்...

* குக்கரில் சோர் வைக்கும் போது குக்கரின் நிறம் மாறாமல் இருக்க தண்ணிரில் இரண்டு சொட்டு எலுமிச்சை சாறு விடவும்...

* இட்லி மாவு கரைத்ததும் அதில் கொஞ்சம் சீனியே தூவி வைத்து விட்டால் மாவு அதிகம் புளிக்காமல் இருக்கும் . இட்லி தோசையின் சுவை கூடுதலாக இருக்கும் ...

* பிரியாணி அடிப்பிடித்து விட்டால்...

பிரியாணி போன்ற மசாலா கலந்த அரிசி உணவுகளை செய்யும்போது, உணவு அடிப்பிடித்து விட்டால் அதன்மீது ஒரு பிரெட் துண்டினை வையுங்கள் தீய்ந்த வாசனை காணாமல் போய்விடும்...

* காய்கறிகளை அரிந்து பிரிட்ஜ்யில் வைத்தால் காய்கறிகளில் உள்ள சத்து குறைந்து விடும்.

* கோதுமை மாவில் வண்டு பிடிக்காமல் இருப்பதற்காக சிறிதளவு உப்பை கலந்து வைத்தால் வண்டு பிடிக்காது...

* இட்லி சாம்பாரில் கடைசியாக மிளகு, சீரகம், காய்ந்த மிளகாய், கொத்தமல்லி போன்றவற்றை ஒரு பாத்திரத்தில் போட்டு பொன் நிறமாக வறுத்து விட்டு மிக்ஸியில் அரைத்து சாம்பாரில் போட்டால் கூடுதல் சுவையாக இருக்கும்..

* எண்ணெய் பலகாரங்கள் டப்பாவில் வைக்கும்போது உப்பைத் துணியில் முடிந்து வைத்தால் காரல் வாடை வராது...

* சப்பாத்திக்கு மாவு பிசையும் போது மிதமான சுடு தண்ணீர் ஊற்றி பிசைந்தால், சப்பாத்தி மிகவும் மிருதுவாக இருக்கும்.

* குக்கரில் சோர் வைக்கும் பொது குக்கரின் நிறம் மாறாமல் இருக்க தண்ணிரில் இரண்டு சொட்டு எலுமிச்சை சாறு விடவும்.

* காய்கறிகளை வேகவைக்கும்போது அதிக தண்ணீர் வைத்து வேக வைக்க கூடாது. ஏன் என்றால் காய்கறிகளில் உள்ள வைட்டமின் சத்துகள் போய்விடும். அதில் உள்ள மனமும் போய்விடும்.

* காய்ந்த மிளகாயை வறுக்கும்போது நெடி வரும். அவை வராமல் இருப்பதற்கு சிறிது உப்பு போட்டு வறுத்தால் நெடி வராது.

* பாஸ்மதி அரிசியை குக்கரில் வைக்கும் பொது, சிறிது எண்ணெய் அல்லது நெய் ஊற்றி வேக வைத்தால், சாதம் நன்றாக தனி தனியாக பிரிந்து நன்றாக வெந்து விடும்.

* முட்டையை வா‌ங்‌‌கி வரு‌ம் போதோ அ‌ல்லது சமை‌க்கு‌ம் போதோ சமையலறை‌யி‌ல் உடைந்து தரையில் கொட்டி விட்டால், அந்த இடத்தில் சிறிது உப்பை தூவுங்கள். நாற்றம் இருக்காது.

*முட்டையை அடித்து ஆம்லெட் போடும்போது, சிறிது பால் கலந்து ஊற்றினால், ஆம்லெட் மென்மையாக இருக்கும்.

*மீனை சுத்தம் செய்வதற்கு முன், சிறிது நேரம், உப்பை போட்டு கிளறி வைக்கவும். இப்படி செய்வதால், மீனிலிருந்து வாடை வராது. மீனில் ஒமீகா 3 பேட்டி ஆசிட் உள்ளது. இது தரமான கொழுப்பு. ஆகையால், மீன் உணவை எந்த வயதினரும் உண்ணலாம். ஒரு வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கும் இந்த மீன் உணவை முள்நீக்கி மசித்துக் கொடுக்கலாம்.

*மஞ்சள் பொடி, உப்பு, எலுமிச்சை சாறு கலவையில், மீன் துண்டுகளைப் போட்டு வைத்தால், அதிக வாடை வராது ..

*பாஸ்மதி அரிசியை குக்கரில் வைக்கும் பொது, சிறிது எண்ணெய் அல்லது நெய் ஊற்றி வேக வைத்தால், சாதம் நன்றாக தனி தனியாக பிரிந்து நன்றாக வெந்து விடும்.

*காய்ந்த மிளகாயை வறுக்கும்போது நெடி வரும். அவை வராமல் இருப்பதற்கு சிறிது உப்பு போட்டு வறுத்தால் நெடி வராது.

*காய்கறிகளை வேகவைக்கும்போது அதிக தண்ணீர் வைத்து வேக வைக்க கூடாது. ஏன் என்றால் காய்கறிகளில் உள்ள வைட்டமின் சத்துகள் போய்விடும். அதில் உள்ள மனமும் போய்விடும்

*குக்கரில் சோர் வைக்கும் பொது குக்கரின் நிறம் மாறாமல் இருக்க தண்ணிரில் இரண்டு சொட்டு எலுமிச்சை சாறு விடவும்.

*சப்பாத்திக்கு மாவு பிசையும் போது மிதமான சுடு தண்ணீர் ஊற்றி பிசைந்தால், சப்பாத்தி மிகவும் மிருதுவாக இருக்கும்.

*எண்ணெய் பலகாரங்கள் டப்பாவில் வைக்கும்போது உப்பைத் துணியில் முடிந்து வைத்தால் காரல் வாடை வராது.

*இட்லி சாம்பாரில் கடைசியாக மிளகு, சீரகம், காய்ந்த மிளகாய், கொத்தமல்லி போன்றவற்றை ஒரு பாத்திரத்தில் போட்டு பொன் நிறமாக வறுத்து விட்டு மிக்ஸியில் அரைத்து சாம்பாரில் போட்டால் கூடுதல் சுவையாக இருக்கும்.

*கோதுமை மாவில் வண்டு பிடிக்காமல் இருப்பதற்காக சிறிதளவு உப்பை கலந்து வைத்தால் வண்டு பிடிக்காது...

*காய்கறிகளை அரிந்து பிரிட்ஜ்யில் வைத்தால் காய்கறிகளில் உள்ள சத்து குறைந்து விடும்.

உங்கள் முஸ் கிச்சன்....

Tips

  • Uploaded by: Mushh Kitchen
  • Views:
  • Category:
  • Share

    0 comments:

    Post a Comment

     
    Copyright © Mushh-Kitchen | Designed by Templateism.com | WPResearcher.com